ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.