Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்…! உதவி செய்வீர்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

புதுவாழ்க்கையில் புகழ் பாராட்டு தேடி வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் நல்ல முன்னேற்றத்திற்கு அடித்தளம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும். பொன் பொருள் வாங்கும் யோகம் இருக்கும். தந்தையாரிடம் கோபம் கொள்ள வேண்டாம். தேவையில்லாத பிரச்சனையை வம்புக்கு இழுக்க வேண்டாம்.மிகவும் வேண்டிய நபரை பிரிய வேண்டிய சூழல் உருவாகும். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வலியப்போய் மற்றவர்களுக்கு உதவுவதால் பிரச்சனை உண்டாகும். வீண்பழி சுமத்த கூடும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கும். சந்தான பாக்கியம் உண்டாகும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தனை செய்து பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியும் மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |