திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கண்டிப்பாக தேர்வை வரும் டிசம்பர் 27 ஆம் தேதி எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும்கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் தேசிய அளவிலான திறனறிவுத் தேர்வு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் மாதம் ரூ.1500 ரூபாயும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.2000 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 30 மதிப்பெண்களும், மற்ற பிரிவினருக்கு 40 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகும். ஆகவே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.