உருமாறிய கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் இன்னும் முடிவடையாத நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் ஒன்று பரவ வேகமாக பரவுவதக்கவும், அது முந்தைய வைரஸை விட வீரியம் அதிகமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடன் தாக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குமட்டல், வாசனை இல்லாமல் போதல், காய்ச்சல், வலி மற்றும் சளி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். மேலும் இந்த உருமாறிய வைரஸ்க்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றால், இறப்பு விகிதங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. புதிய மாறுபாட்டுடன் இதுவரை பதிவு செய்யப் பட்ட பாதிப்புகளில் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.