முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வேறு வழியின்றி ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டது. பின்னர் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த போது ஸ்ரீ பெரம்பத்தூரில் வைத்து திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி படு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து இன்றோடு 28 ஆண்டுகள் ஆகிறது.
Former Prime Minister Dr Manmohan Singh, UPA Chairperson Smt Sonia Gandhi, Congress President @RahulGandhi and General Secretary @priyankagandhi pay homage to former Prime Minister Rajiv Gandhi on his death anniversary. #RememberingRajivGandhi pic.twitter.com/bmerpRSeRE
— Congress (@INCIndia) May 21, 2019