Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா பிறந்தநாள்… ‘இடியட்’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்…!!!

நடிகை அக்ஷரா கவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இடியட்’படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை அக்ஷரா கவுடா 2011 ஆம் ஆண்டு வெளியான ‘உயர்திரு 420’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து துப்பாக்கி, போகன் , இரும்பு குதிரை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அக்ஷரா கவுடாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இடியட்’ படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் . ஸ்டைலிஷ் தமிழச்சி என அழைக்கப்பட்ட அக்ஷரா கவுடா அந்த போஸ்டரில் சூனியக்காரி தோற்றத்தில் உள்ளார். இயக்குனர் ராம்பாலா இயக்கியுள்ள ஹாரர் காமெடி வகையான இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 மாதத்திற்கு முன்பு வெளியாகியிருந்தது .

Categories

Tech |