பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , சஞ்சு ஆகிய திரைப்படங்களில் அசத்தலாக நடித்திருந்தார். இவரும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர் . இதுவரை ரன்பீர் கபூரும் ஆலியாவும் தங்களை காதலர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில்லை .
இந்நிலையில் பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் துடன் நடத்திய உரையாடலில் மனம் திறந்து பேசியுள்ளார் ரன்பீர் கபூர் . அதில் எப்போது திருமணம்? என்கிற கேள்விக்கு தனது காதலியான ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன்’ என பதிலளித்துள்ளார் ரன்பீர் கபூர். மேலும் கொரோனா பரவல் மட்டும் இல்லையென்றால் எங்கள் திருமணம் எப்போதோ நடந்திருக்கும் என சிரித்துக்கொண்டே ரன்பீர் கூறியுள்ளார் .