புரவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு ஒரு 28ஆம் தேதி தமிழகம் வருகிறது.
கடந்த சில நாட்களில் நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்த புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் புயலின் பாதிப்பு இல்லை என்றாலும் கொட்டிய மழை நீர் காரணமாக பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.நிவர் புயல் பாதிப்புகளை மத்திய குழு ஏற்கனவே ஆய்வு செய்ய விட்ட நிலையில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டது, இந்நிலையில் புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 28ஆம் தேதி தமிழகம் வருவதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் என்பதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் பற்றி அறிக்கை தயார் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.