தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர்.
தற்போது இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இந்நோய் தாக்குதலின் காரணமாக பயிர்கள் ஒரு சில நாட்களுக்குள் கருகி விடுகின்றன. இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 20 ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் மருந்து வாங்கி அடித்துள்ளனர். ஆனாலும் நோயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பயிர்கள் வீணாவதைக் கண்டு விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.