Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு ரூ. 2,500″… உருவான புதிய சிக்கல்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அதிர்ச்சி..!!

தமிழகத்தில் முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகை குறித்த அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனையை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அவற்றை செயல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏனெனில் ஊதியத்தை உயர்த்த விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதேபோல் கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான காலவரம்பு அக்டோபர் 31ஆம் தேதி நிறைவு பெற்றது. ஆனால் இதுவரை கூறிய தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் எந்த நேரமும் இறங்கலாம் என்ற கருத்து உள்ளது.

சமீபத்தில் தமிழக மக்களை மகிழ்விக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு எடை 2,500 ரூபாய் ரொக்கம் வழங்க போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதற்காக 5,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். அதுவும் வீடுவீடாக டோக்கன் செய்யப்படும், ரேஷன் கடைகளில் ஊழியர்கள் மூலம் பொங்கல் பரிசு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த டோக்கன் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இது மூலம் எஸ்எம்எஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையொட்டி சுயநல நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றது. இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய பிரச்சினையை சரி செய்யாவிட்டால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் புறக்கணிப்போம் என்று கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |