Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே… ஜனவரியில் கட்டாயம்… அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..!!

நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வரும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நடப்பு செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு இம்மாதம் இறுதிக்குள் நடத்தப்படவேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும்.

ஆன்லைன் தேர்வுகளை கண்காணிப்பு செய்வதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்வு சம்பந்தப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்களா? என்பதை புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். தேர்வு கால அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |