மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடியது என்று இங்கிலாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து உடனான விமான சேவையை தடைசெய்துள்ளது. பல நாடுகள் எல்லைகளை மூடி உள்ளன.
இந்நிலையில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மற்றொரு புதிய வகை உருவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இல்லை என்றும், இது மாறுபட்ட வகை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும், இதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவை எனவும் கூறியுள்ளது. மேலும் இது தொடக்கத்தில்தான் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கொரோனா விரைவில் பரவுகிறது என்றாலும், மிகவும் கடுமையான நோய்க்கு வழி வகுக்கிறது என்பதை இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
இருப்பினும் இந்த புதிய வைரஸ் தடுப்பூசிக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம் என கூறியுள்ளனர். முன்னதாக ஆப்பிரிக்கா கண்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவுவதாக செய்தி வெளியானது. ஆப்பிரிக்கா கண்டத்தில் இப்போது 2.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் 3.3% சதவீதம் அளவில் அதிகரித்துள்ளது.