வயதானவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அவரது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் வாழ்க்கை அமையும் என்று கூறுவது உண்டு.
ஒருவருக்கு தன்னிடமுள்ள சிந்தனையும் செயல்பாடுகளும் அவரை உயர்த்தி வாழ்த்தியும் காட்டுகின்றது. தினந்தோறும் காலையில் நாம் எழும்புவது நம் மனதில் நல்ல சிந்தனைகளே விதைக்கவேண்டும். எதிர்பாராமல் சில நேரத்தில் தூக்கத்திலே உயிர் பிரியும் அபாயம் உண்டு, எனவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு மரணத்தை போன்றதுதான். ஒவ்வொரு நாளும் பொழுது விடியும்போது பிறந்ததாகதான் நினைக்க வேண்டும்.
நாம் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் நம்முடைய உற்சாகத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது. தினமும் நாம் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நாம் பார்க்கும் முதல் விஷயம் நம் மனதில் அழகாக பதிந்திருக்கும். இப்பொழுது கேட்டால்கூட காலையில் நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? மறந்து போயிருக்கும். உங்களுடைய ஆழ்மனம் அதை ஞாபகப்படுத்தும். அதனால்தான் காலையில் எழுந்தவுடன் சில பொருள்களை பார்ப்பதால் புத்துணர்ச்சி இருக்கும். குறிப்பாக நம்முடைய இரு உள்ளங்கையை பார்த்து அன்றைய நாளை அதிர்ஷ்டமாக கொண்டு செல்லும்.
அதேபோல் தெய்வீக பாடல்களையும், புத்தகங்களையும் பார்ப்பது நல்ல நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும். பண மழை பொழிய கண்விழித்ததும் மகாலட்சுமியின் உருவத்தை அல்லது மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரையின் படத்தை பார்ப்பது மிகவும் நல்லது. எனவே தூங்கும்பொழுது தாமரை படத்தை பெரிதாக மாட்டி வையுங்கள். நம்முடைய படுக்கையறையில் எழுந்து உடன் அதை பார்க்குமாறு வையுங்கள். சில படத்தை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சிந்தனைகளை தூண்டும். அதில் கண் விழிக்கும் பொழுது இந்த படத்தை பார்த்து அன்றைய நாள் உற்சாகம் இழக்க வைத்திடும்.