விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெய்ஜா – ஷைன்ஷா. இத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மன்சூர் உசேன் என்ற ஒரு மகன் உள்ளான்.உசேன் நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி எதிர்பாராதவிதமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது.
இதில் உசேன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். லாரி ஓட்டுனரின் அலட்சியத்தாலயே தனது மகன் உயிரிழந்தான் என்று சிறுவனின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.