Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான நண்டு முருங்கைக்காய் பிரட்டல்… செய்து பாருங்கள் …!!!

நண்டு முருங்கைக்காய் பிரட்டல் செய்ய தேவையான பொருள்கள் :

பட்டை                                –  3 அளவு
எண்ணெய்                        –   8 ஸ்பூன்
தேங்காய் துருவல்       –    2 கப்
கறிவேப்பிலை               –    2 கொத்து
காய்ந்த மிளகாய்           –    4
அரைத்துக் கொள்ளவேண்டியவை
பூண்டு                                 –   5 பல்
முழு மிளகு                      –    5  ஸ்பூன்
தக்காளி                             –   4
சின்ன வெங்காயம்     – 12
முருங்கைக்காய்         –  3
நண்டு                                –  2 கிலோ

செய்முறை :

முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். பின்பு முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் அரைக்க கொடுத்த பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் சின்ன வெங்காயத்தை நன்கு தட்டியோ அல்லது அரிந்தோ வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்தட்டிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையும் போட்டு வதங்கியதும், அரைத்த தக்காளியை ஊற்றி சிறிது நேரம் வதக்கவும்.

பிறகு  அதில் அரைத்த மசாலாவினை சேர்த்து மிதமான தீயில், பச்சைவாசனை போக வதக்கவும். வதங்கி எண்ணெய் மினு மினுவென்று இருக்கும்போது நண்டையும், முருங்கைக்காயையும் சேர்த்துநன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும். இடையில் கிளறி விட்டு மூடி விடவும்.

பின்னர் நண்டும் வெந்து காயும் வெந்து மசாலாவுடன் பிரண்டு கொண்டு இருக்கும்.அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.பின்பு பரிமாறவும்

Categories

Tech |