மட்டன் கறி செய்ய தேவையான பொருள்கள் :
மட்டன் – 1/2 கி
தக்காளி – 5
மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு
செய்முறை :
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியை நறுக்கி சேர்க்கவேண்டும் .பின்பு தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை இடைவிடாமல் வதக்கவும்.பின்பு மட்டன் சேர்த்து 5 விசில் விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.