Categories
தேசிய செய்திகள்

“1600 முறை போன் செய்தேன்” அவள் என்னிடம் பேசவில்லை…. காதலன் வெறிச்செயல்…!!

இளைஞர் ஒருவர் தன்னிடம் காதலி பேச மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர்பகுதியில் வசிப்பவர் சினேகலதா(19). இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா அந்த பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜேஷ் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்ரிமெண்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து வேலைக்கு போனதிலிருந்து சினேகா ராஜேஷிடம் பேசுவதை கொஞ்சம் குறைந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சினேகா வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பல இடங்களில் தேடிய போது புதருக்குள் சினேகாவை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சினேகா செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ராஜேஷிடம் இருந்து 1600 க்கும் மேற்பட்ட முறை போன் கால் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ராஜேசை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியதில் ராஜேஷ், “நான் ஒரு ஆண்டாக அவளை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால் திடீரென்று பேசுவதை நிறுத்தியதால் என்னால் தாங்க முடியவில்லை. மேலும் அவர் வேறு ஒரு ஆணுடன் அவருடன் பழகி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே சினேகாவிடம் இதுகுறித்து பலமுறை கூறியும் கேட்கவில்லை. எனவே அவரை தனியாக அழைத்துச் சென்று துரோகம் செய்ய நினைத்ததால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தீ வைத்து எரித்தேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |