தமிழகத்தில் இனிமேல் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகின்றார். அதனை நடத்தக் கூடாது என்று தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “கிராமசபை கூட்டங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டு விட்டது எடப்பாடி பழனிச்சாமி அரசு. கிராமசபை என்ற பெயரில் கூட்டம் நடக்கக் கூடாதாம்!. இனிய மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும். எந்த சக்தியாலும் அதனை தடுக்க முடியாது” என்று ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.