மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்துள்ளது கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கமலாயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிலையில், மக்கள் நீதி மையத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மையத்தை தொடங்கியது முதலே அக்கட்சியின் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அருணாச்சலம், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இணைந்துள்ளார்.
அதன் பிறகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மையம் ஆகாததால், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன். புதிய வேளாண் சட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் வழி வகுத்து பாஜக தந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.