தமிழகத்தில் தனிக் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முக. அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் கட்சி தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்று இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் முக.அழகிரி, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜனவரி 3 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவில் மறுபடியும் சேரும்படி தனக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை. விரைவில் ரஜினியை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.