Categories
அரசியல்

“என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே”… ஒரு விமானத்தின் விளையாட்டு… வைரலாகும் வீடியோ..!!

சிறிய குழந்தை பொம்மையை வைத்து விளையாடுவது போன்று கிரேன் ஆபரேட்டர் விமானத்தை வைத்து விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

செயல்பாட்டில் இல்லாத சிறிய ரக விமானத்தை ராட்சத கிரேன் உதவியுடன் வானில் பறக்க செய்து விளையாட்டு காட்டிய கிரேன் ஆபரேட்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் பதிவையும் பெற்றுள்ளது.

360 டிகிரியில் அந்த சிறிய ரக விமானம் சுற்றி வந்தது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்ததாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த போது கூட, அது வானில் பறக்கும் போது கூட வானில் இவ்வளவு வரவேற்பு பெற்று இருக்காது. ஆனால் தற்போது நல்ல வரவேற்பு பெற்று இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

https://twitter.com/HolyCow_Inc/status/1341699504563757057

Categories

Tech |