Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும்” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது 

மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை (மே 23-ம் தேதி) நடைபெறுகிறது.  நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related image
வாக்கு எண்ணும் மையங்களில்  கூடுதல் பாதுகாப்பு இருப்பது அவசியம் என மாநில தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை, கலவரம் என எந்த வித  அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |