டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்குவதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் அனைவரும் பொருள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்குவதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித்தொகையை மத்திய அரசு இன்று விடுவிக்கிறது. 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அடுத்த தவணை தொகையாக 18 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது.