Categories
கேரளா மாநிலம்

காவல்துறையினரால் மீண்டும்…. கறுப்பினத்தவர் சுட்டு கொலை…. மக்கள் போராட்டம்….!!

காவல் துறையினரால் மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதர் ஆண்ட்ரே மாரிஸ் ஹில் ( 47). இவர் கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு வீட்டின் கேரேஜில் இருந்துள்ளார். அப்போது நடைபெற்ற சிறிய சம்பவத்தின் போது அங்கு வந்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் மாரிஸை சுட்டுக் கொன்றுள்ளார். இவரை சுட்டுக்கொன்ற காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காட்சியில் காவல்துறையினர் வீட்டிலிருந்து வெளியே வரும்படி மாரிஸை எச்சரிக்கின்றனர்.

உடனே மாரிஸ் தன் செல்போனை இடதுகையில் வைத்துகொண்டு வலதுகையை பின்பக்கமாக மறைத்தபடி வந்துள்ளார். இப்படி அவர் வருவதை கொண்ட அதிகாரி ஆடம் கோய் என்பவர் தன் துப்பாக்கியால் உடனடியாக அவரை சுட்டுள்ளார். இதில் அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாரிஸை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் இறந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆடம் கோய் என்ற காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரின் பேட்சும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் ஆப்பிரிக்கா-அமெரிக்கர் சுட்டுக் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேலும் இதேபோல் கேசி குட்சன் ஜூனியர் என்ற 23 வயதான  இளைஞரும் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் காவல் துறையினரால் சுடப்பட்டுள்ளார்.

மேலும் அவர் வைத்திருந்த சான்விட்ஜை காவல்துறையினர் துப்பாக்கி என்று கருதி அவரை சுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து அமெரிக்காவில் நேற்று காவல்துறையினர் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க மக்கள்  போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |