Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் மருந்து வியாபாரம்… ஏமாந்த தொழிலதிபர்… சிக்கிய நைஜீரிய ஆசாமி…!!!

முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார்.

சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தும் போலிக் ஆயில் தனக்குத் தேவைப்படுகிறது என்றும், அதனை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தால் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் எழிசபெத் கூறினார்.

ஒரு முறைக்கு கப்பலில் ரூ.40 லட்சத்துக்கு போலிக் ஆயில் அனுப்பினால்ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மும்பையில் செயல்பட்டு ஸ்டார் என்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசுமாறு எலிசபெத் தெரிவித்தார். அதனால் ஒரு குறிப்பிட்ட ஸ்டார் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அதில் சுனிதா என்பவர் 40 லட்சம் வைப்புத் தொகை செலுத்தச் சொன்னார். ஆகையால், ஆன்லைன் மூலமாக ரூபாய் 40 லட்சம் அனுப்பி வைத்தேன்.

போலிக் ஆயில் தருவதாக சொல்லி என்னிடம் இருந்து ஆன்லைன் மூலமாக பணத்தை பெற்றனர். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு இன்னும் எதையும் அனுப்பவில்லை. பணம் அனுப்பி வைத்த பிறகு எலிசபெத் உள்பட யாரும் செல்போன் அழைப்பை எடுத்து பேசவில்லை.அதன் பின்னரே தன்னை மோசடி செய்து விட்டார் என்று தெரிந்தது. ஆகையால் இதுகுறித்து விசாரணை செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தார்.

சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் இவ்வழக்கு குறித்து விசாரணை செய்து வருகிறார். இணை கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர் .சைபர் கிரைம் போலீசார் மும்பை சென்று விசாரித்தனர்.

அப்போது எலிசபெத் என்ற பெயரினும், சுனிதா என்ற பெயரிலும் பெண் குரலில் பேசி 7 பேர் கொண்ட கும்பல் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அதில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வில்மர் <வயது 27> என்பவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்பு அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 6 பேர் தலைமறைவாக உள்ளனர். அவைகளை தனிப்படை அமைத்து அவர்களை தேடுவதற்கு போலீசார் திட்டம் தீட்டியுள்ளனர்.

Categories

Tech |