Categories
மாநில செய்திகள்

“என்னை அணைக்க” கமலுக்கு மட்டுமே உரிமை – நடிகை குஷ்பூ…!!

என்னை அணைக்கவும், சண்டை போடவும் கமலுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் முன்னதாக இருந்தார். இதையடுத்து சமீபத்தில் இந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் தன்னுடைய அரசியல் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனும் கட்சியை தொடங்கி தற்போது அடுத்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில்  மும்முரமாக ஈடுபட்டு வந்துகொண்டிருக்கிறார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை பற்றி கமல் கூறியிருக்கிறார்.

மேலும் குஷ்புவின் கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குஷ்புவுக்கு விவசாயிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது போல கமல்ஹாசன் பேசியுள்ளார். இதையடுத்து குஷ்பு இது குறித்து பேசுகையில், “என்னை அணைக்கவும், சண்டை போடவும் கமலுக்கு மட்டுமே உரிமை” என்று தெரிவித்துள்ளார். மேலும் கமலஹாசன் தன்னுடைய சிறந்த நண்பர். தான் சொல்லும் கருத்துகளுக்கு அவர் எதிர்வினையாற்றுவது எனக்கு எதுவும் பிரச்சினை கிடையாது என்றும், அரசியல் எதிரிகள் போல கமல் எனக்கு கிடையாது. என்னுடைய நல்லது கெட்டது அனைத்திலும் கமல் இருப்பார் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |