Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி : திமுக 37 தொகுதி முன்னிலை…. அதிமுக 2 தொகுதி முன்னிலை..!!

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது 

மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் வன்முறை எதுவுமின்றி தேர்தல் அமைதியான முறையில்  நடந்துள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Related image

இந்நிலையில் மக்களவை தொகுதியில் திமுக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவாண்ணாமலை, கரூர், நெல்லை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்,   திருச்சி, பெரம்பலூர், தூத்துக்குடி, நாமக்கல், ஸ்ரீ பெரும்புதூர், சிவகங்கை, ஆரணி, அரக்கோணம், வட சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, தென்காசி, மத்திய சென்னை, தென் சென்னை,  பொள்ளாச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளுர், சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, விழுப்புரம்,  கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து அதிமுக தர்மபுரி, தேனி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ளது.

Categories

Tech |