மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இது அதிகாலையில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதும் அதிர்ச்சியில் மக்கள் அனைவரும் சாலைகளுக்கு ஓடிச் சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து சிறிது நேரம் சாலைகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் உண்டான சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.