Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்… வெளியான தகவல்கள்…!!!

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றுள்ளார் . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா ,குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்து அப்பல்லோ  நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளது.

Categories

Tech |