திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் புது சத்திரத்தில் கடல்சார் படிப்பு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின் போது மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது சக மாணவருடன் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆதித்யா சர்மா என்ற மாணவரை தாக்கி உள்ளார். அதன்பிறகு தகராறு முற்றியதால் அந்த மாணவரை குத்தி கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.