Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் ‘பகவான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆரி… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் ஆரி நடித்துள்ள ‘பகவான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான ‘ரெட்டைச்சுழி’ படத்தில் அறிமுகமானார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் . இதன் பின் நடிகை நயன்தாராவின் ‘மாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . ஆனால் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்கள் சரியான  வரவேற்பை பெறவில்லை.

Bhagavan Aari anna upcoming movie..Aari anna mass???? - YouTube

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள ஆரி நேர்மையின் சிகரமாக அனைவரின்  பாராட்டைப் பெற்று வருகிறார். பிக்பாஸ் ரசிகர்களும் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் கூறி வருகின்றனர். தற்போது இவர் நடித்துள்ள ‘பகவான்’  ஃபர்ஸ்ட் இலுமினாட்டி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டார். வித்தியாசமான டைட்டில் கொண்ட இந்த போஸ்டரில்  மிரட்டலான லுக்கில் ஆரி அசத்தியுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது

Categories

Tech |