Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய்க்கு என்ன தகுதி இருக்கு அரசியலுக்கு வர?… சீமான் அதிரடி விமர்சனம்…!!!

நடிகர் விஜய் தனது தகுதிகளை வளர்த்துக்கொண்டு அரசியலுக்கு வரட்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர். இதனை விமர்சித்தே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழும் அடியை பார்த்து நடிகர்கள் எவரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் என்று குறித்து மீண்டும் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தகுதிகளை வளர்த்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வரட்டும். நடிகர் விஜய்யை தொடங்க காலத்தில் இருந்து தற்காத்து வந்தவன் நான். அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என கூறவில்லை. சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |