Categories
உலக செய்திகள்

91% பலனளிக்கும்…. சீனாவின் சிநோவாக் தடுப்பூசி…. ஆர்டர்களை குவித்த நாடு ….!!

சீனாவில் சிநோவாக் தடுப்பூசி 91% பலனளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் உள்ள மொத்த மக்கள் தொகை 83 மில்லியன் ஆகும்.  இவர்களில் கொரனோ பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 19,115 என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது துருக்கி நாட்டின் சுகாதார அமைச்சரான பக்ருதீன் கோகா கூறுகையில் சீனாவின் சிநோவாப் தடுப்பூசி  சிறிது நாட்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தடுப்பூசியை துருக்கியை சேர்ந்த தன்னார்வலர்கள் 7,371 நபர்கள் மீது பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் 91.25 விழுக்காடு பலனளித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மூன்றாம் கட்டத்திற்கான பரிசோதனைகள் இன்னும் முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் துருக்கி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 3 மில்லியன் ஸ்நோவாக் தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை அடுத்த மாதம் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் துருக்கி சிறிது நாட்கள் கழித்து பைசர்/பயோஎன்டெக் நிறுவனத்திடமும் 4.5 மில்லியன் டோஸ்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யவுள்ளது. மேலும் சுகாதாரத்துறை கூறுகையில், இந்த நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகள் இறக்குமதியான பிறகு எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடமிருந்து தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், டோஸ்கள் கிடைத்தவுடன் துருக்கியில் 1.5 முதல் 2 மில்லியன் மக்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசிகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |