Categories
மாநில செய்திகள்

“எல்இடி பல்பு வாங்கியதில்” 500 கோடி ஊழல்…. செய்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி – திமுக புகார்…!!

அமைச்சர் எஸ்பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதில் 500 கோடி ஊழல் செய்துள்ளதாக திமுக புகார் மனுவை கொடுத்துள்ளது.

திமுக நிர்வாகிகள் கடந்த 22ஆம் தேதி அன்று அதிமுக அமைச்சர்கள் குறித்த 22 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் திமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதற்காக சுமார் 600 கோடி ஊழல் செய்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரை உலக அளவில் கொடுத்திருந்தால் பணம் சேமிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் எல்இடி விளக்குகள் அதிக விலையை நிர்ணயிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அழுத்தம் கொடுத்ததாகவும், தன்னுடைய பினாமிகளின் பெயரில் டெண்டர் எடுத்து அதிக விலைக்கு பழைய எல்இடி பல்புகளை பொருத்துவதற்கான ஒப்பந்தங்களை அமைச்சர் வேலுமணி வழங்கியுள்ளார் என்றும் இந்த புகாரில் தெரிவித்து உள்ளனர். எனவே 600 கோடி ஊழல் செய்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊழல் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |