Categories
உலக செய்திகள்

இனி பெட்ரோல் வாகனங்கள் கிடையாது…. அதற்கு பதில் இது தான்…. அறிவித்த நாடு…!!

பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை மாற்றும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

ஜப்பான் அரசு 2050 ஆம் வருடமளவில் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய போவதாகவும் வருடத்திற்கு குறைந்தது 2 ட்ரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பசுமை வளர்ச்சித் திட்டமானது இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் கார்பன் உமிழ்வை நீக்குவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்காகவும் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனோவால் ஏற்பட்ட பாதிப்பால் பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்பது, சீனா போன்ற பிற நாடுகளை தொடர்ந்து லட்சிய உமிழ்வு  இலக்குகளை அடைவது போன்ற காரணங்களுக்காக பிரதமர் பசுமை முதலீட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மேலும் பசுமை முதலீட்டினால் 2030 ஆம் வருடத்தில் ஆண்டிற்கு  870 பில்லியன் டாலர் இலக்கு மற்றும் 2050 வருடத்திற்குள் ஆண்டிற்கு 1.8 பில்லியன் டாலர் இலக்குகளை குறிவைத்து பணியாற்றும் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவிகளை அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை திட்டத்தில் பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஆதரிப்பதற்காக 2 ட்ரில்லியன் மதிப்புடைய பசுமை நிதி அளிக்கப்படவுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் ஹைபிரிட் மற்றும் எரிபொருள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை வைத்து பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சியாகும். மேலும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை அதிகப்படுத்துவதற்காக 2030ஆம் வருடத்திற்குள் வாகனங்களின் பேட்டரி விலையை குறைக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் இலக்கு கடல் காற்று, அமோனியா எரிபொருள் ஆகிய தொழில்களை மேற்கொண்டு 2040 ஆம் வருடத்தில் 45 ஜிகாவாட் கடல் காற்றின் சக்தியை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |