சட்ட பேரவை இடைத்தேர்தலில் திமுக 11 மற்றும் அதிமுக 11 தொகுதிகளிலும் சம நிலையில் முன்னிலை வகிக்கிறது
மக்களவை தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதோடு சேர்த்து கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சட்ட பேரவை இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே- 19 ம் தேதி நடத்தப்பட்டது. இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை (மே 23-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்ட பேரவை இடைத்தேர்தலில் திருவாரூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், பெரியகுளம் ஓட்டப்பிடாரம் ஆகிய 11 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதை தொடர்ந்து பாப்பி ரெட்டிபட்டி, சாத்தூர், ஓசூர், சோளிங்கர், பரமக்குடி, விளாத்திகுளம், மானாமதுரை, ஆண்டிபட்டி, சூலூர், அரூர், நிலக்கோட்டை ஆகிய 11 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.