மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார்.
2021 வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும் கட்சி ஆரம்பித்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் எப்போதும் நடைபெறும் தேர்தலைவிட வரும் வருடம் நடக்கப்போகின்ற தேர்தல் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்று மக்களுடைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பட்சத்திலும் ரஜினியிடம் கட்சி ஆரம்பிக்க சொல்லி அழுத்தம் கொடுப்பதாக அண்மையில் ஒரு பேட்டியில் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.