Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! 600 பேரால் சீரழிக்கப்பட்ட…. சிறுமியின் உடல்…. “70 வயது மூதாட்டி போல் தளர்வு”…!!

600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த காவல்துறையினரின் விசாரணையில், “சிறுமிக்கு பத்து வயதாக இருக்கும் போது அவருடைய தாயும், தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

எனவே சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி என்பவர் சிறுமியை படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் பதிமூன்று வயது முதல் அவரை மிரட்டி தவறான தொழிலுக்கு தள்ளிய விஜயலட்சுமி சிறுமியை பல புரோக்கர்களிடம் அனுப்பி பணம் பெற்றுக்கொண்டு கைமாற்றி விட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களில் மட்டும் ஜெயலட்சுமி தன்னுடைய தோழிகளான அனார்கலி, சந்திரா தங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், சரவண பிரபு சின்ன தம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சிறுமியை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் 5 பேரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓட்டுநர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை என 600க்கும் மேற்பட்டவர்கள் சிறுமியை சீரழித்து உள்ள நிலையில் அனைவர் மீதும் எவ்வித பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கபடும் என்று காவல்துறையினர் கூறிய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடுமையான அத்துமீறல்களில் சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல உள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |