Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் வசந்த்தின் ‘மை டியர் லிசா’ … படத்தின் திரில்லான ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

நடிகர் விஜய் வசந்த் நடித்துள்ள ‘மை டியர் லிசா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் வசந்த் சென்னை-28 படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் நாடோடிகள், அச்சமின்றி, வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள த்ரில்லர் திரைப்படம் ‘மை டியர் லிசா’ . இந்த படத்தில் சாந்தினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது மை டியர் லிசா || My dear Lisa is  coming back after 30 years

இயக்குனர் ரஞ்சன் கிரிஷ்ணதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் மை டியர் லிசா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |