குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மிகப்பெரிய வேலை. சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பிரபலமான பெயரை வைக்க விரும்புவார்கள்.
சிலர் அரிதான பெயரை வைக்க விரும்புவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு 2080 வரை இலவசமாக பீட்சா சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒரு பெயரை வைத்துள்ளனர். உண்மையில் பீட்சாவுக்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான டோமினோஸ் ஆஸ்திரேலியா தம்பதியினர் 60 ஆண்டுகளுக்கு இலவச பீட்சா பெரும் வாய்ப்பை அவர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன் 60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் டோமினோ இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டியை அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 9 2020 அன்று ஒரு குழந்தை பிறந்தது. அவர்களின் பெற்றோர் டி க்ளெமெண்டைன் ஓல்ட்ஃபீல்ட் மற்றும் அந்தோனி லூட், ‘டொமினிக்’ என்ற பெயரை வைத்ததால், அவர்கள் அடுத்த 60 ஆண்டுகளுக்கு டோமினோ பிஸ்ஸாவை இலவசமாக சாப்பிட முடியும் என குறிப்பிட்டுள்ளது.