Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலை சிற்றுண்டிக்கு ஏற்ற… அருமையான ருசியில்… இந்த ரெசிபி செய்து சாப்பிடுங்க..!!

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் செய்ய  தேவையான பொருள்கள்: 

ஸ்ட்ராபெர்ரி துண்டுகள்      – 1/4 கப்
திராட்சை                                     – 2 டீஸ்பூன்
ஆப்பிள் துண்டுகள்                 – 1/4 கப்
அன்னாசி பழம்                         – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு துண்டுகள்                 – 3 டீஸ்பூன்
வேஃபர் பிஸ்கெட்                   – 4
செர்ரி                                             – 2
வெனிலா ஐஸ்க்ரீம்              – 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்       – 1/2 கப்

செய்முறை:

முதலில்அண்ணாச்சி பழம்,ஆரஞ்சு பழம், ஆப்பிள் பழம், திராச்சை, ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து, அதில் தண்ணீரால் சுத்தம் செய்து, அதன் தோலை நீக்கியபின், அவற்றை தேவையான வடிவத்தில் துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மேலும் நறுக்கிய பழ துண்டுகளை பவுலில் போட்டு ஒன்றாக கலந்தபின், அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்களை தேவையான வடிவத்தில் வைத்ததும், அவற்றின் மேல் வேஃபர் பிஸ்கெட்டுகளை வைத்து பிரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து, எடுத்து பரிமாறினால், ருசியான ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம் ரெடி.

Categories

Tech |