Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்னாக்ஸ்சாக…அருமையான ருசியில்… இந்த ரெசிபி செய்யலாம்..!!

பிரெட் க்ராப் செய்ய தேவையான பொருட்கள்: 

பிரெட்                                                  – 4 ஸ்லைஸ்
மசித்த உருளைக்கிழங்கு         – 1
பச்சைப் பட்டாணி                         – 1/3 கப்
துருவிய கேரட்                               – 1/3 கப்
துருவிய கோஸ்                            – 1/3 கப்
மைதா                                                 – 3 டீஸ்பூன்
ரவை                                                    – 1 டீஸ்பூன்
கரம் மசாலா                                     – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு                          – 1 டீஸ்பூன்
எண்ணெய்                                         – தேவைக்கேற்ப
சாட் மசாலா                                      – 1/2 டீஸ்பூன்
உப்பு                                                       – தேவைக்கேற்ப
வெங்காயம்                                       – 1/3 கப்
பச்சை மிளகாய்                               – 3
இஞ்சி                                                    – சிறிய துண்டு

செய்முறை:

முதலில்அடுப்பில் வாணலியை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு,தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்து, தோல் நீக்கி, உதிரியாக மசித்து கொள்ளவும். பின்பு கேரட்மற்றும் கோஸை எடுத்து பொடியாக துருவி எடுத்து கொள்ளவும்.

மேலும் வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி,பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பச்சை மிளகாயை எடுத்து  அதில் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும். பின்னர் இஞ்சியின் தோலை நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அதற்கு அடுத்து கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியபின், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியபின், துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.

மேலும் வதக்கிய கலவையானது நன்கு வெந்ததும், அதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு பிரட் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து தூளாக உதிர்த்து எடுத்து கொள்ளவும்.

பின்பு உதிர்த்த பிரெட் தூளுடன், மைதா மாவு, ரவை, மசித்த உருளைக்கிழங்கு, சிறிதளவு உப்பு சேர்த்து, கெட்டியான மாவு பிசைவது போல் பிசையவும்

பின்னர் பிசைந்த மைதா கலவையை, தேவையான அளவு  நீளவாக்கில், அகலமாக  திரட்டியபின், அதன் நடுவில், வதக்கி வைத்த கலவையை, அதில் வைத்து, மைதா கலவையை அப்படியே சுருட்டி, ஜடை பின்னல் போல் மடித்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சுருட்டி வைத்த கலவையை போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறினால், ருசியான பிரெட் க்ராப் ரெடி.

Categories

Tech |