Categories
Uncategorized சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில்… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யனுமா ? அப்போ இந்த ரெசிபிய சாப்பிடுங்க போதும்..!!

ஓட்ஸ் கீர் செய்ய தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்                           – 1 கப்
பால்                                – 300 லிட்டர்
தேன் (அ) சர்க்கரை –  தேவையான அளவு
பாதாம்                           – 3
பேரிச்சை                      – 2
ஏலக்காய்                      – 3
உலர் திராட்சை         – 4
வாழைப்பழம்             – 1

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வாழை பழத்தை தோல் நீக்கியபின், துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதே அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் வறுத்த ஓட்ஸை போட்டு, நன்கு வேக வைத்து கொள்ளவும்.

மேலும் வேக வைத்த ஓட்ஸ்சுடன், பேரிச்சம் பழம், உலர் திராட்சை பழம், அரைத்த வாழை பழத்தை போட்டு நன்கு வேகவைத்ததும்,சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இறுதியில், சர்க்கரை கரைந்ததும், அதில் ஏலக்காயை உதிர்த்து போட்டு நன்கு கிரீம் போல‌ மாறும் வரை நன்கு கெட்டியாக வந்ததும் இறக்கி கிளாசில் அல்லது பவுலில் ஊற்றியபின் கூடுதலாக பேரிச்சம் பழம், பாதம் பருப்பை துருவி போட்டோ பரிமாறினால், ருசியான ஓட்ஸ் கீர் ரெடி

Categories

Tech |