இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி வினியோகம் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், முதற்கட்டமாக இந்தியாவில் ஆந்திரா, அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒத்திகை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.