Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… இத யாரும் நம்பிடாதீங்க… வைரலாகும் ஜியோ அரிசி…!!!

ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்து வருகிறது என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி ஆனது. ஜியோ லோகோ அச்சிடப்பட்ட சாக்குப் பைகள் சந்தையில் இலவசமாக கிடைப்பதாகவும், அதற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது.

அதனால் பொதுமக்கள் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாதிரியான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதால் சில நேரங்களில் விபரீதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதனால் பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |