Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈவினிங் ஸ்பெஷலாக… இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க..!!

நேந்திரம் பழம் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம்   – 1
எண்ணெய்            –  தேவையான அளவு

மாவிற்கு:

மைதா                    – 1 கப்
அரிசி மாவு           – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு                         – 1 சிட்டிகை
ஏலக்காய்              – 2 (தட்டியது)

செய்முறை: 

முதலில் நேந்திரம் பழத்தை எடுத்து தோல் நீக்கியபின், வட்ட வடிவத் துண்டுகளாக வெட்டி எடுத்து பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு,சர்க்கரை, சிறிது உப்பு, ஏலக்காயை சிறிது தட்டி அதில் போட்டு நன்கு மென்மையாக கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும், நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, கலந்து வைத்த மாவில் நனைத்ததும்,கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு, நன்கு வேக வைக்கவும்.

மேலும் வேக வைத்த நேந்திர பழ அப்பத்தைநன்கு வெந்ததும், இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால் மொறுமொறுப்பான  ருசியில் நேந்திரம் பழம் அப்பம் தயார்.

Categories

Tech |