Categories
மாநில செய்திகள்

தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா… மக்களே முன்னெச்சரிக்கை அவசியம்… ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாண சிகிச்சை முறையினை பற்றி சோதனை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாற்றம் அடைந்த வைரஸா என்று கண்டறிவதற்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் வைரஸை  கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். முகக் கவசம் அணிந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்று கூறினார்.

Categories

Tech |