Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ருசியில்… சூப்பரான ரெசிபி..!!

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி செய்ய  தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு                  – 1 கப்,
பொடித்த வெல்லம்         – 1/2 கப்,
தேங்காய்த்துருவல்        – 1/4 கப்,
முந்திரி                                 – 8 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள்                – 1/4 டீஸ்பூன்,
நெய்                                        – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் கடலைப்பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து இறக்கி, தண்ணீர் வடிகட்டி ஆற வைத்து கொள்ளவும். மேலும் வடிகட்டிய கடலைப்பருப்பை மிக்சிஜாரில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு தேங்காயை எடுத்து மெல்லியதாக துருவி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாயை வைத்து சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், அரைத்த கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி விட்டபின் கேசரி திரண்டு கெட்டியானதும், அதில் வறுத்து அரைத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சிறிதளவு நெய் சேர்த்து நன்கு கிளறிவிட்டு இறக்கி பரிமாறினால் ருசியான கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி ரெடி.

Categories

Tech |