Categories
மாநில செய்திகள்

Flase News: டிசம்பர் 28 முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப்கார் சேவை இயக்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ரோப்கார் சேவை நிறுத்தம் செய்யப் பட்டிருந்தது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப்கார் சேவை இயக்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரோப்கார் சேவை இயக்கப்படும். அதற்கு http://tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் ரோப்கார் சேவை யில் இரு வழிப் பயணத்திற்கு நாளொன்றுக்கு முதலில் வரும் 1500 பக்தர்கள் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது.

Categories

Tech |