உருளைக்கிழங்கு முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
முட்டை – 4
கொத்தமல்லி – சிறிதளவு
உருளைக்கிழக்கு – 2
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
சீரகம், கடுகு – கால் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை :
முதலில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழையை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
மேலும் வெங்காயம் நன்கு வதங்கியபின், அதனுடன் நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு சிறிது வதக்கி, வேக வைக்க லேசாக தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கு நன்கு வெந்தபின், அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு தூவி பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும்.
இறுதியில் வதக்கிய கலவையானது, நன்கு கெட்டியாக வந்து, முட்டை வெந்து உதிரியாக வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, இறக்கி பரிமாறினால், உருளைக்கிழங்கு முட்டை பொரியல் ரெடி.